லால்பேட்டை  : மார்ச் 24,

லால்பேட்டை  ஜாகீர் உசேன் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

குமராட்சி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தேவசேனா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஸ்ரீ தேவி வரவேற்றார். லால்பேட்டை ஜித்தா டிராவல்ஸ் நஜிர் அஹமது, முன்னாள் ஊராட்சி தலைவர் பாபுராஜன் முன்னிலை வகித்தனர்.

மேற்பார்வையாளர் பாலமுருகன் சிறப்புரையாற்றினார். பட்டதாரி ஆசிரியர் பவுல்சுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி செயல்பாடுகள் குறித்து ஆசிரியை ஷகினா எடுத்துரைத்தார். கலைநிகழ்ச்சிகளை புவனேஸ்வரி, ஜாஸ்மின் ஜெயந்தி, பேபிஅமலா, ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

ஆசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.