லால்பேட்டை : மார்ச் 26,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு எள்ளேரியில் 25.03.2018 அன்று மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்க்குழு உறுப்பினர் தேர்தல் அதிகாரியான கிபாயத்துல்லாஹ் மற்றும் மாநில அமைப்பு செயலாளர் தாம்பரம் யாக்கூப் அவர்கள் தலைமையிலும் தமுமுக மாநில உலாமாக்கள் அணி செயலாளர் மௌலவி முஹம்மது அன்சாரி, A.V.அப்துல் நாசர்,நூரூல் அமீன் ஆகியோர் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

தமுமுக மமக மாவட்டத்தின் தலைவராக லால்பேட்டை எஸ்.எச்.அப்துல் சமது அவர்களும் தமுமுக மாவட்டத்தின் செயலாளராக புவனகிரி சவுக்கத் அலிகான் மமக மாவட்டத்தின் செயலாளராக ஆயங்குடி முஹம்மது நூஃமான் தமுமுக மமக மாவட்ட பொருளாளராக பின்னத்தூர் எஸ்.எம்.ஜே.முஹம்மது அஸ்லம் ஆகியோர் தேர்வு செய்யபட்டார்கள்

மேலும் இப்பொதுக்குழுவில் தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் துணை நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் நகரம், ஒன்றியம், பகுதி கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.