லால்பேட்டை  : ஏப்ரல் 01,

கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகரம் தமுமுகவின் மாணவர் பிரிவான சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் இலக்கை மறந்த இளைய சமுதாயம் என்ற தலைப்பில் மாபெரும் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் மாணவர்களின் சங்கமம் சமூகநீதி மாணவர் இயக்கம் நகர செயலாளர் P.M.முஹம்மது ராசிது தலைமையில் (31-03-2018) அன்று நடைபெற்றது.

IPP நகர பொருளாளர் A.K.முஹம்மது நசீர் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார் தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்

சமூகநீதி மாணவர் இயக்கம் நகர பொருளாளர் N.A.முஹம்மது நபில் வரவேற்புரை நிகழ்த்தினார்

இந்நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் P.அப்துல் சமது தமுமுக மாநில உலமா அணி செயலாளர் M.Y.முஹம்மது அன்சாரி மமக மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் M.ஜைநூல் ஆபிதீன் இந்திய தவ்ஹித் ஜமாத் மாநில செயற்குழு உறுப்பினர் கமாலுதீன் சமூகநீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் திருச்சி ஷரிப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்

மேலும் இந்நிகழ்ச்சியில் தமுமுக மமக மாவட்ட தலைவர் அப்துல் சமது தமுமுக மாவட்ட செயலாளார் புவனை சவுகத் மமக மாவட்ட செயலாளர் முஹம்மது நூஃமான் தமுமுக மமக மாவட்ட பொருளாளர் முஹம்மது அஸ்லம் மற்றும் தமுமுக மமக மாவட்ட அணி நிர்வாகிகள் துணை நிர்வாகிகள் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பகுதி கிளை நிர்வாகிகள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியின் முடிவில் சமூகநீதி மாணவர் இயக்கம் நகர துணை செயலாளர் M.F.முஹம்மது ரிஜ்வான் நன்றியுரை நிகழ்த்தினார்