ஆதார் எண்ணை நில உரிமையாளர்கள் ஆவணத்தில் இணைக்க வேண்டும் என்றும், ஆதார் எண்ணை இணைக்காவிடில் பினாமி பணபரிவர்த்தனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஆதார் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த வாரம் வங்கிக்கணக்கில் ஆதார் எண்ணை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும்  என்றும், அப்படி இணைக்காவிட்டால் வங்கிக்கணக்கு ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. தற்போது, நில உரிமையாளர்களுக்கு மத்திய அரசு செக் வைத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு இன்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஆதார் எண்ணை நில உரிமையாளர்கள் ஆவணத்தில் இணைக்க வேண்டும் என்றும், ஆதார் எண் இணைக்காவிடில் பினாமி பணபரிவர்த்தனை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

Thans@ vikatan news