லால்பேட்டை  : ஏப்ரல் 05,

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக் காத மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்து உள்ளது. தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆங்காங்கே சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இதனால் தமிழகம் போராட்டக்களமாக மாறி உள்ளது.

இந்தநிலையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவின்படி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இன்று (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக ,மஜக, இந்திய தேசிய லீக் உள்ளிட்ட கட்சிகளும், லால்பேட்டை வர்த்தக சங்கம் அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து  இன்று லால்பேட்டையில் முழு கடையடைப்பு  போராட்டம் நடைபெற்று வருகிறது.