அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

எல்லாம் வல்ல ரஹ்மானின் வற்றாத பெரும்கொடையினைக் கொண்டு உத்தம திருத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல் ஆசியினைக் கொண்டு கத்தார் லால்பேட்டை ஜமாஅத்தின் பொதுக்குழு கூட்டம் கத்தார் மாநகர் தோஹாவில் 13/04/2018 அன்று மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு மாரூப் பாய் அவர்களின் இல்லத்தில் மிகுந்த எழுச்சியோடும் ,உற்சாகத்தோடும் நடைபெற்றது.

இதில் துவக்கமாக முஹம்மது ஹுசேன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து லால்பேட்டையின் சிறப்புகள்,ஜகாத் மற்றும் சதக்காவின் பயன்கள் பற்றி மௌலவி இர்பானுல்லாஹ் சிறப்புரையாற்றினார்கள். மேலும் ஜமாத்தின் வருங்கால செயல்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்களை ஜமாஅத்தின் செயலாளர் அஹமது ரிலா விரிவாக எடுத்துரைத்தார். இறுதியாக ஜமாத்தின் துணைத் தலைவர் முஹம்மது உஸாமா நன்றியுரையாற்றினார்கள்.

2018 – 2019ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்ந்துஎடுக்கப்பட்டனர்

தலைவர் முஹம்மது தஸ்லீம்

துணை தலைவர் முஹம்மது உஸாமா

செயலாளர் அஹமது ரிலா

பொருளாளர் யக்கீன் அஹமது

துணை செயலாளர்கள்
1. பக்கீர் முஹம்மது Doha Al Jadeed
2. முஹம்மது மன்சூர் Al Wakra / Al Wukair
3. மொளலவி இர்பானுல்லாஹ் Umm Salal
4. மசியுல்லா Najma,Mansoura
5. பைஜூர் ரஹ்மான் Al Khor
6. பஜ்லுத்தீன் Sanaiya
7. முஹம்மது புஹாரி Gharaffa,Dafna,Madinath Khaleefa
8. சையது முஸ்தபா Ain Khalid,Abu Hamour,Aziziya
9. முஹம்மது பைசல் Ar Rayan,Muaither
10. முஸ்தாக் Khartiyath

பொதுக்குழுவில் பின் வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது
1. #JusticeForAsifa
ஜம்மு காஷ்மீரில் கத்துவா பகுதில் ஆசிபா என்ற மாணவியை பல நாட்கள் கோவிலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

2. #BanSterlite
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களும் கேடுகள் ஏற்படுவதாகவும், ஆலை விரிவாக்க நடவடிக்கையை அரசு கைவிட்டு ஆலையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த அ.குமரெட்டிபுரம் கிராம மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

3. #CauveryManagementBoard
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

4. அனைத்து கட்சிகளும் அதன் தலைவர்களும் ஓன்று சேர்ந்து நடத்திக்கொண்டுருக்கும் போராட்டங்கள் வெற்றி பெற மேலும் இந்த ஒற்றுமை தொடரவும் இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

5. லால்பேட்டையின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு மருத்துவமனை அமைய அதன் பொறுப்பாளர்கள் தொடர்ந்து செயல்படுமாறு இந்த பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.