லால்பேட்டை  : ஏப்ரல் 15,

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார் குடியில் காஷ்மீரில் ஆஷிபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவரைக்குள் அடைத்து வைத்து காவல்துறை அதிகாரிகளும் RSS பயங்கரவாதிகளும் மூன்று நாட்கள் கற்பழித்து கொடூரமான முறையில் படுகொலை செய்த பாசிச பயங்கரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரி காட்டுமன்னார் குடி பேருந்து நிலையம் அருகில் தமுமுக மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று 15-04-2018 நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாநில உலமா அணி செயலாளர் M.Y.முஹம்மது அன்சாரி தமுமுக மாநில தலைமை செயற்க்குழு உறுப்பினர் A.V.அப்துல் நாசர்,திராவிட கழகம் தலைமை கழக பேச்சாளர் யாழ் திலீபன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன எழுச்சியுரை நிகழ்த்தினர்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மாவட்ட துணை தலைவர் முஹம்மது இக்பால் தமுமுக மாவட்ட செயலாளார் புவனை சவுகத் மமக மாவட்ட செயலாளர் முஹம்மது நூஃமான் தமுமுக மாவட்ட பொருளாளர் முஹம்மது அஸ்லம் மற்றும் தமுமுக மமக மாவட்ட அணி நிர்வாகிகள் துணை நிர்வாகிகள் முன்னால் மாவட்ட நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் பகுதி கிளை நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

காட்டுமன்னார் குடி தமுமுக நகர தலைவர் S.ஷேக் ரபீக் நன்றியுரை கூறினார்.